Author: QuickNewsTamilSrilanka

டுபாய், ஷார்ஜாவுக்கான விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சகம், தனது கடல் எல்லைக்குள் 3 ஈரான் ஏவுகணைகளை இடைமறித்ததாகத் தெரிவித்துள்ளது. மேலும் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து, டுபாய் மற்றும் ஷார்ஜாவுக்கான விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஃபுஜைரா எண்ணெய் துறைமுகம் மீது நடத்தப்பட்ட ஆளில்லா…

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்து யுவதி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (03) கிணற்றில் தவறி விழுந்த யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா (வயது 19) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த…

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொர்பில் வெளியான அறிவிப்பு

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும், எதிர்வரும் 10 ஆம் திகதியளவில் மீண்டும் 11 சதவீதத்தினால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென் மாகாணத்திலும்…

அத்தியாவசிய மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு?

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மருந்து விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக, அத்தியாவசிய மருந்துகளுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ தொழிற்சங்கப் பிரதிநிதியொருவர் எச்சரித்துள்ளார். இது குறித்து மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர்…

வருட இறுதிக்குள் பலர் சிறை செல்வார்கள் – ஜனாதிபதி

மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சி அமையும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.…

இலங்கை ரூபாயின் பெறுமதி 2.9 சதவீதத்தால் வீழ்ச்சி

2026 ஏப்ரல் மாத இறுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 2.9% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி இறுதியில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல் சூழலைத் தொடர்ந்து, வெளிநாட்டுத் துறையில் ஏற்பட்ட அழுத்தங்கள்…

கலாச்சாரப் பணியில் ஒரு சகாப்தம் நிறைவு!

சம்மாந்துறை பிரதேச சபையில் கலை கலாசார பிரிவின் அங்கத்தவர்களின் அர்ப்பணிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட நீண்டகாலம் மக்கள் பணியாற்றிய கலாச்சார உத்தியோகத்தர் திரு. ரஷ்மி மூசா அவர்களுக்கு, நேற்று சம்மாந்துறையில் மிக எழுச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது.​இந்த கௌரவமிக்க நிகழ்வில், சம்மாந்துறை…

இன்று எரிபொருள் விலை அதிகரிக்குமா?

இன்றைய தினம் (மே 01) எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விலை திருத்தங்கள் குறித்து உரிய நேரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என கூட்டுத்தாபனத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.…

சர்வதேச உழைப்பாளர் தினம் இன்றாகும்

இன்று நாம் அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை மற்றும் வாராந்த விடுமுறை என்பது தானாகக் கிடைத்தவை அல்ல. 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சிகாகோ வீதிகளில் தொழிலாளர்கள் சிந்திய இரத்தத்திலிருந்து கிடைத்ததே இந்த சர்வதேச மே தினமாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய…