‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடலில் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துகொண்டேன்.’கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள், மக்களுக்கு மிகவும் நெருக்கமான வகையில் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இது வெறும் அரசாங்கத்தின் திட்டமாக மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், மக்கள் பங்களிப்புடன் கூடிய செயற்திட்டங்கள் ஊடாக ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தை மேலும் பிரபலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இங்கு வலியுறுத்தினேன்.மேலும், கடந்த ஆண்டின் முன்னேற்றங்கள் இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், எதிர்வரும் ஆண்டிற்கான இலக்குகளை அடைந்துகொள்வதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினரை எவ்வாறு ஒருங்கிணைத்துச் செயற்படுவது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. Post navigation பெண்ணின் தலைமுடியை வெட்டி சித்திரவதை செய்த விவகாரம்: 5 பேர் கைது சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் [ SLMC ] மத்திய குழு கூட்டம் | எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து விரிவான ஆராய்வு!